மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் மீட்பு
Onion
Sri Lanka
By Beulah
பெரிய வெங்காயத்துக்கான விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, சந்தைக்கு விநியோகிக்கப்படவிருந்த மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் கண்டறியப்பட்டுள்ளது.
லியனகேமுல்ல பகுதியில் உள்ள சேமிப்பு நிலையமொன்றில் வைத்தே குறித்த வெங்காய தொகை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிலோ ஒன்றின் விலை
மூன்று கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய பெரிய வெங்காயம் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தையில் தற்போது பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 450 ரூபாவாக காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி