படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க : அநுரவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Anura Kumara Dissanayaka President of Sri lanka Election
By Shalini Balachandran Sep 23, 2024 11:52 AM GMT
Report

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிவழங்க வேண்டும் என லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகாரத்தின் முன்னால் உண்மையை பேசியமைக்காக 15 வருடங்களிற்கு முன் நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எங்களின் தந்தைக்கு உயிருக்கு நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது குடும்பமும் தளராத உறுதியுடன் காணப்படுகின்றோம்.

அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்

அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்

வலி வேதனை

15 வருடங்களாகின்ற போதிலும் அந்த வலி வேதனை தொடர்கின்றது ஆனால் உண்மை பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவது குறித்து நான் மிகவும் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளேன்.

கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் எனது தந்தையின் படுகொலை குறித்து அர்த்தபூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது.

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க : அநுரவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Lasantha Wickramatunga Daughter Request To Anura

இது நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது அத்தோடு நேற்றைய தேர்தல் முடிவுகள் எனது நம்பிக்கையை புதுப்பித்துள்ளன.

ஜே.வி.பி வரலாற்று ரீதியில் அதிகார வர்க்கத்தினை கடுமையாக விமர்சித்து வந்துள்ளது இலங்கையின் சமீபத்தைய மனித உரிமை வரலாற்றில் இடம்பெற்ற அநீதிகளிற்கு தீர்வை காண்பதில் இந்த புதிய தலைமைத்துவம் புதிய நோக்கத்தினை கொண்டு வரும் என நான் நம்புகின்றேன்.

இது ஆரம்பம்தான் : தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட அறிவிப்பு

இது ஆரம்பம்தான் : தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட அறிவிப்பு

பெருமளவு ஆதாரங்கள்

எங்களின் துணிச்சலான திறமை மிக்க சிஐடி அதிகாரிகள் சானி அபயசேகர, நிசாந்த டி சில்வா போன்றவர்களிடம் பெருமளவு ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும், கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் எனது தந்தையின் படுகொலை குறித்து அர்த்தபூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது.

மக்கள் தங்கள் எண்ணத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள், ராஜபக்சவின் பயங்கர ஆட்சியின் கீழ் பயங்கரமான இழப்புகளை சந்தித்த எனது தந்தைக்கும் ஏனைய குடும்பங்களிற்கும் நீதியை வழங்குவேன் என உறுதியளித்துள்ள அநுரகுமார திசாநாயக்கவை நாங்கள் வாழ்த்துக்கின்றோம்.

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க : அநுரவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Lasantha Wickramatunga Daughter Request To Anura

இலங்கையில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்காக நாங்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமாகவுள்ளோம்.

நீதிக்கான பாதை நீண்டமானது கடினமானது என்ற போதிலும் எனது தந்தைக்கான எனது போராட்டத்தில் அவரது பாரம்பரியத்தை கௌரவிப்பதில் நான் உறுதியாகயிருக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பிரச்சினையை தீர்க்க புதிய ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

தமிழர் பிரச்சினையை தீர்க்க புதிய ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026