பிரபல இந்திய பாடகியின் உடல் அரச மரியாதையுடன் தகனம் ( படங்கள்)
body
cremate
Lata Mangeshkar
full royal honors
By Vanan
கொரோனாவால், உயிரிழந்த பிரபல இந்திய பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் பூரண அரச மரியாதையுடன் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் பீடித்த அவர், மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்குத் தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 8.12 அளவில் அவர் உயிரிழந்திருந்தார்.
இவரின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி - பிரபல தென்னிந்தியப் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு! அரிய புகைப்படங்கள் இணைப்பு



