நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள்

Sri Lanka Law and Order
By Dharu Feb 16, 2026 10:17 AM GMT
Report

கொழும்பில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் படுகொலை செய்த கொலையாளிகளை கைது செய்து சட்டத்தினை நிலைநாட்டுமாறு கோரியும் நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மூதூர்

இதன்படி மூதூர் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (16) நீதிமன்றத்திற்கு முன்னாள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தமையை கண்டித்து கையில் கருத்தப்பட்டி அணிந்தும்,கடமையில் ஈடுபடாதும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மூதூர் நீதீமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

செய்தி -புஹாரிஸ்

வவுனியா

கொழும்பில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை - வவுனியாவிலும் இன்று நீதிமன்ற நடவடிக்கைகள் புறக்கணிப்பு வவுனியா சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இதன்படி நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவிலும் சட்டத்தரிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

செய்தி - கபில் 

கல்முனை 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று (16) காலை கல்முனை நீதிமன்ற வளாகம் முன்பாக அமைதியான கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கான விசேட பொதுக்கூட்டம் இன்று காலை 9.00 மணிக்கு கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற பின்னர் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் கருப்பு பட்டி அணிந்த சட்டத்தரணிகள், “சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுக”, “சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு வழங்குக” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும், அதனை பிரதிபலிக்கும் பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் சட்டத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

சட்டத்தரணிகள் தங்களது தொழில்பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

செய்தி - உமர்

திருகோணமலை 

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று தெரிவித்திருந்தனர்.

இதற்கு ஆதரவாக இன்று திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து சட்ட தரணிகள் இன்றை தினம் தமது கடமைகளில் இருந்து விலகியிருந்தனர்.

இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பித்திருந்தன இதில் சட்டத்தரணிகள் கருப்புக் கொடியை ஏற்றி நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிருந்தனர்.

விசாரணைக்கு வந்திருந்த வழக்குகளில் சட்டத்தரணிகள் முன்னிலை ஆகாத காரணத்தால் அனைத்து வழக்குகளையும் வேறு திகதி வழங்கி இது தொடர்பான வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிய சட்டத்தரணிகள் | Lawyers Who Withdrew From Court Proceedings

செய்தி - தொம்சன்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025