வெள்ளை மாளிகைக்குப் புறப்படும் லெபனான் ஜனாதிபதி!
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.
இதனடிப்படையில், இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்திக்கவுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் லெபனான் நாட்டின் தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
தொடர் தாக்குதல்
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் லெபனானில் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.

ஜூன் 26 அன்று அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இஸ்ரேலுக்குத் தேவையான அழுத்தத்தை வழங்குமாறு ட்ரம்ப்பிடம் அவூன் கோரிக்கை வைக்கவுள்ளார்.
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் வசம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான எழுத்துப்பூர்வத் திட்டத்தையும் அவர் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.
லெபனானின் இறையாண்மை
லெபனானின் இறையாண்மையை மீட்டெடுக்கத் ட்ரம்ப்பின் தலையீடே ஒரே தீர்வு என்று லெபனான் அரசு நம்புகிறது.
முன்னதாக, அமெரிக்க ஆதரவு பெற்ற லெபனான் இராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றி, கடந்த ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 62 வயதான ஜோசப் அவூன், ஈரானுக்காக லெபனான் அழிக்கப்படுவதாக ஹிஸ்புல்லா அமைப்பைக் கடுமையாகச் சாடினார்.

இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால், ஹிஸ்புல்லா ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தபோதிலும், நாட்டின் பாதுகாப்பைக் கருதி அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.
இந்த இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 22 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்