பல்கலைக்கழக மாணவர்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! உருவாக்கவுள்ள புதிய சட்டம்
பல்கலைக்கழக மாணவர்கள் இலவசப் பரீட்சைக்குத் தோற்றும் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தேவையான சட்டம் இயற்றப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
சில பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளகப் பரீட்சையில் சித்தியடைய தவறி 6-7 வருடங்கள் பல்கலைக்கழகத்தில் தங்கி மாணவர் விடுதிகள் மற்றும் ஏனைய பொது வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் பயன்படுத்துவதால் ஏனைய மாணவர்களுக்கு பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாகவும் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
எனவே பல்கலைக்கழக மாணவர்கள் எத்தனை முறை உள்ளகப் பரீட்சைக்குத் தோற்றலாம் என்பதை தீர்மானித்து அதற்குத் தேவையான சட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,