மெஸ்ஸியின் மனைவியின் கவர்ச்சி நடனம்..! கொண்டாடி தீர்க்கும் ஆர்ஜென்ரீனா (காணொளி)
லியோனல் மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோ கிறிஸ்துமஸ் அன்று சிவப்பு உடையில் கவர்ச்சியாக ஆடிய காணொளி வைரலாக பரவிவருகின்றது.
36 ஆண்டுகள் கழித்து அர்ஜென்டினா கர்த்தார் கால்பந்து உலகக்கோப்பையை வென்றது.
இதனை ஒட்டுமொத்த அர்ஜென்டினாவும் கொண்டாடி தீர்த்தது. இன்னும் உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்திலிருந்து எளிதில் வெளிவராத மக்களும் உள்ளனர்.
இது மெஸ்ஸிக்கும் பொருந்தும். ஏனெனில், லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குடும்பத்தினருக்கான கொண்டாட்டங்கள் இன்னும் முடிவடைவதாகத் தெரியவில்லை.
உலகக் கோப்பை
கடந்த இரண்டு வாரங்கள் தான் மெஸ்ஸிக்கு அவரது வாழ்க்கையின் சிறந்த தருணமாக மாறியுள்ளது. அவர் தனது உழைப்பின் பலனை அனுபவித்து வருகிறார்.
அவர் இறுதியாக தனது வாழ்க்கையில் மிகப்பெரிய தடையைத் தாண்டி, இறுதியாக அர்ஜென்டினாவுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.
மெஸ்ஸி சமீபத்தில், கிறிஸ்துமஸ் தினத்தன்று ‘Pa’ la Selección' என்ற பாடலுக்கு தனது மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோ கையில் மதுபானத்துடன், சிவப்பு உடையில் கவர்ச்சியாக ஆடிய நடனத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வைரலாகிய காணொளி
UNA VEZ MAS MESSI DEJANDO LA VARA ALTA , SUBIO UNA HISTORIA DE ANTONELLA BAILANDO PERO QUE HOMBRE Y ELLA PERO QUE MUJER DIOS LA MEJOR PAREJA DE ARGENTINA pic.twitter.com/8imIAVORlO
— franco (@brillamila) December 24, 2022
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அன்டோனெல்லா ரோக்குசோ நடனமாடிய இந்த காணொளி வைரலாகி வருகிறது.
மெஸ்ஸி மற்றும் அன்டோனெலா இருவரும் குழந்தை பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள், இருவரும் ரொசாரியோவைச் சேர்ந்தவர்கள், திருமணத்துடன் மீண்டும் புதுவடிவில் தொடங்கிய அவர்களது காதல் தற்போது மூன்று குழந்தைகளுடன் குடும்பமாக தொடந்துவருகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
