உடலுக்கு தீங்கானவற்றை இணையத்தில் விளம்பரப்படுத்தியவர்களுக்கு ஏற்பட்ட நிலை!
இந்த ஆண்டில் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளை இணையத்தில் விளம்பரப்படுத்திய 169 பேரை கைது செய்துள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பெருமளவில் மதுபானம் மற்றும் புகையிலை ஆகிய இரண்டின் வரிப்பணத்தில் தங்கியிருப்பதாக பலர் கூறுகின்ற போதிலும், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை தடுப்பதே இந்த கைதுகளின் இலக்கு என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை, 2006 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் சிகரெட் மற்றும் மதுபான பாவனையை தடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தொலைபேசி செயலி
இந்த போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளதாகவும், “இதுபோன்ற நேரடி அல்லது மறைமுக ஒன்லைன் விளம்பரதாரர்கள் அல்லது தளங்களைப் பற்றி தெரிவிக்க புதிய தொலைபேசி செயலியான VNATA ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
