நாடளாவிய ரீதியில் மூடப்படும் மதுபான சாலைகள்..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் இன்று ( 04.05.2023 ) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதன்படி ,மே 04, 05, 06 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் மூடத்தவறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.
04, 05, 06 ஆகிய மூன்று நாட்கள்
இருப்பினும், 05, 06, 07 ஆகிய மூன்று நாட்கள் மதுபானசாலைகள் மூடப்படும் என மாறுப்பட்ட தகவல் வெளியான நிலையில், 04, 05, 06 ஆகிய மூன்று நாட்களே மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி