பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி - 2014 தொடரில் தவறவிட்டதை 2022ல் கைப்பற்றுவாரா மெஸ்ஸி

Football France Argentina FIFA World Cup Qatar 2022
By Dharu Dec 18, 2022 10:31 AM GMT
Report

உலகில் 1930 முதல் நடைபெற்று வரும் fifa உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை எட்டு அணிகள் வெற்றியாளர் பட்டம் வென்றுள்ளன.

உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழா என்றால் அது fifa நடத்தும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மட்டுமே.

கோடிக்கணக்கான ரசிகர்கள், பல கோடி ரூபாய் பரிசு, பலம் வாய்ந்த அணிகள், புதிய வரலாறு படைக்கும் நட்சத்திர வீரர்கள் என கால்பந்து உலகமே உற்றுநோக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக அரங்கேறும்.

இந்நிலையில் இதுவரை உலகக்கோப்பை வென்றவர்கள் யார்? எத்தனை முறை வென்றுள்ளனர்? என்ற கேள்விகள் எழுவது இயல்பான ஒன்று. அதற்கான பதிலை இங்கே காணலாம்.

முதல் உலகக்கோப்பை

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி - 2014 தொடரில் தவறவிட்டதை 2022ல் கைப்பற்றுவாரா மெஸ்ஸி | List Of Fifa World Cup Champions 1930 To 2018

fifa நடத்திய முதல் உலகக்கோப்பை தொடர் உருகுவே நாட்டில் நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்தி உருகுவே கோப்பையை வென்றது.

இந்த அணி 1950ஆம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது .

அதன்பிறகு உருகுவே அணிக்கு உலகக்கோப்பை என்பது கனவாகவே தொடர்ந்து வருகிறது. இறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெற முடியவில்லை.

பிரேசில் படைத்த சாதனை

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி - 2014 தொடரில் தவறவிட்டதை 2022ல் கைப்பற்றுவாரா மெஸ்ஸி | List Of Fifa World Cup Champions 1930 To 2018

இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் அதிக முறை வெற்றி கோப்பையை பெற்ற அணி என்ற பெருமையை பிரேசில் பெற்றுள்ளது.

1958, 1962, 1970, 1994, 2002 என 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. மேலும் 1950, 1998 ஆகிய தொடர்களில் இறுதி போட்டி வரை சென்று இரண்டாம் இடம் பிடித்தது.

நடப்பு தொடரில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி இருந்த நிலையில் காலிறுதி போட்டியில் குரோஷியா உடன் எதிர்பாராத தோல்வியை சந்தித்து கண்ணீருடன் வெளியேறியது.

இதனால் நெய்மரின் உலகக்கோப்பை கனவு தடைபட்டு போனது.

ஜெர்மனி

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி - 2014 தொடரில் தவறவிட்டதை 2022ல் கைப்பற்றுவாரா மெஸ்ஸி | List Of Fifa World Cup Champions 1930 To 2018

பிரேசில் சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ஜெர்மனி காணப்படுகின்றது.

நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஜப்பான் உடன் தோல்வி, ஸ்பெயின் உடன் சமநிலை என 4 புள்ளிகளை மட்டும் பெற்று தகுதி சுற்றிலேயே வெளியேறியது.

இதுவரை 1954, 1974, 1990, 2014 என நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது.1966, 1982, 1986, 2022 என நான்கு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

அதிகமுறை (8) உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையை ஜெர்மனி பெற்றிருக்கிறது.

தகுதி பெறாத இத்தாலி

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி - 2014 தொடரில் தவறவிட்டதை 2022ல் கைப்பற்றுவாரா மெஸ்ஸி | List Of Fifa World Cup Champions 1930 To 2018

யூரோ 2020 தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் உலகக்கோப்பை 2022 தொடருக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்தது.

இருப்பினும் இதன் சாதனைகள் வரலாற்றில் என்றென்றும் இடம்பிடித்திருக்கும். 1934, 1938, 1982, 2006 என நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நடப்பு தொடரில் விளையாடி இருந்தால் ஒட்டுமொத்த களமே மாறியிருக்கக் கூடும்.

மேலும் 1970, 1994 என இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இரண்டாம் இடம் பிடித்தது.

பலம் வாய்ந்த ஆர்ஜன்டீனா

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி - 2014 தொடரில் தவறவிட்டதை 2022ல் கைப்பற்றுவாரா மெஸ்ஸி | List Of Fifa World Cup Champions 1930 To 2018

ஆர்ஜன்டீனா என்றாலே கால்பந்தின் கடவுள் டியகோ மரடோனா தான் முதலில் நினைவுக்கு வருவார்.

இவரது தலைமையில் 1986 உலகக்கோப்பையை வென்றது கால்பந்து வரலாற்றில் மறக்க முடியாத அத்தியாயம்.

இதற்கு முன்பு 1978ல் உலகக்கோப்பையை ஆர்ஜன்டீனா வென்றிருந்தது. மொத்தம் இருமுறை உலகக்கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா இம்முறை 3வது கோப்பையை எதிர்நோக்கி இறுதிப் போட்டியில் காத்திருக்கிறது.

லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்பதால் உணர்வு பூர்வமான வெற்றியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் 1930, 1990, 2014 என மூன்று முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர்.

2014 உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி தவறவிட்டதை 2022ல் கைப்பற்றி காட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியன் பிரான்ஸ்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி - 2014 தொடரில் தவறவிட்டதை 2022ல் கைப்பற்றுவாரா மெஸ்ஸி | List Of Fifa World Cup Champions 1930 To 2018

1998, 2018 என இருமுறை உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி வென்றுள்ளது. 2006ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு சென்று இத்தாலி உடன் சமநிலை செய்து பெனால்டி சூட்-அவுட்டில் 5-3 என தோல்வியை தழுவியது.

நடப்பு சாம்பியன் என்ற பெருமையுடன் கத்தாரில் நடைபெற்று வரும் 2022 உலகக்கோப்பை தொடரிலும் இறுதிப் போட்டி வரை சென்று அசத்தியுள்ளது.

தொடருக்கு முன்பு பென்சீமா, போக்பா என நட்சத்திர வீரர்களின் காயம் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இருப்பினும் இறுதி வரை முன்னேறி தனது பலத்தை நிரூபித்துள்ளது.

இம்முறை மெஸ்ஸியின் கனவை தகர்த்து தொடர்ந்து இரண்டாவது முறை உலகக்கோப்பையை பிரான்ஸ் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தீராத சாபம் இங்கிலாந்து

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி - 2014 தொடரில் தவறவிட்டதை 2022ல் கைப்பற்றுவாரா மெஸ்ஸி | List Of Fifa World Cup Champions 1930 To 2018

1966ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டும் உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து. அதன்பிறகு Its Coming Home என்று பாடிக் கொண்டே, உழைத்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.

ஆனால் வெளிநடப்பு சுற்றிலேயே வெளியேறி விடுவர் என்று எழுதப்படாத விதி தொடர்கிறது.

யூரோ 2022 தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறினர். ஆனால் 1-1 என சமநிலை ஆனதால் பெனால்டி சூட்-அவுட்டில் 3-2 என்ற கோல்கணக்கில் இத்தாலி உடன் தோல்வியை தழுவி இரண்டாம் இடம் பிடித்தது.

நடப்பு தொடரில் பிரான்ஸ் உடன் காலிறுதியில் விளையாடினர். ஆனால் 1-2 என்ற கோல்கணக்கில் தோல்வியுற்று வெளியேறினர். இந்த போட்டியில் கேப்டன் ஹேரி கேன் தவறவிட்ட பெனால்டி வாய்ப்பு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு சுட்டிக் காட்டப்படும்.

கோல்டன் ஜெனரேஷன் ஸ்பெயின்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி - 2014 தொடரில் தவறவிட்டதை 2022ல் கைப்பற்றுவாரா மெஸ்ஸி | List Of Fifa World Cup Champions 1930 To 2018

 ஸ்பெயின் 2010ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதற்கு முன்பும், பின்பும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. நடப்பு தொடரில் கோல்டன் ஜெனரேஷன் என்ற பட்டாளத்துடன் களமிறங்கியது.

ஆனால் 16 அணி சுற்றில் மொராக்கோ உடன் பெனால்டி சூட்-அவுட்டில் 3-0 என ஸ்பெயின் தோல்வியை தழுவி வெளியேறியது.

இதன்மூலம் கோல்டன் ஜெனரேஷன் பட்டாளம் விடை பெற்றுக் கொண்டது. இவர்களில் பலர் விரைவில் ஓய்வு பெற்றுவிடுவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த தலைமுறையாவது ஸ்பெயினை உலக அரங்கில் முன்னிறுத்துமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2022 வெற்றியாளர் யார்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி - 2014 தொடரில் தவறவிட்டதை 2022ல் கைப்பற்றுவாரா மெஸ்ஸி | List Of Fifa World Cup Champions 1930 To 2018

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடப்பாண்டு (2022) கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இன்று இடம்பெறும் இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களின் உலகக்கோப்பை எண்ணிக்கை 3ஆக அதிகரிக்கும்.     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015