உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள் எவை தெரியுமா!
இந்த உலகில் வேலையில்லாமல் இருப்பவர்கள் ஏராளம். எனினும், அதிக சம்பளத்துடன் பெரும் பணியிடங்களுடன் இருக்கும் சில பணிகளுக்கு மக்கள் செல்ல விருப்பம் காட்டுவதில்லை.
அவ்வாறான வேலைகள் என்ன என பார்க்கலாம்.
சுகாதாரப் பணியாளர் வேலைக்கு அதிக தேவை உள்ள நிலையில் இந்த பணிக்கு அதிகமானோர் செல்லுவதில்லையாம். உலக நாடுகளில் இந்த வேலைகளுக்கு என தனி பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல் வருட சம்பளம் அதாவது இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகின்றது.
இறைச்சிக்கூடப் பணியாளர்
இறைச்சிக்கூடப் பணியாளர் வேலைக்கு எந்த கல்வித்தகைமையும் அறிவும் தேவையில்லை. இறைச்சிக் கடைகள், ஏற்றுமதி நிறுவனங்களில் அதனை வெட்டி அனுப்பும் பணி இந்த பணிக்கு மக்கள் அதிகதாக செல்ல அக்கறை செலுத்துவதில்லை. இந்த வேலைக்கு 15 டொலர்கள் மணிநேரத்திற்கு கிடைக்கும்.அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,200 சம்பளமாக வழங்கப்படுகின்றது.
கழிவறை பணியாளர் பணிக்கு வளர்ந்த நாடுகளில் உபகரணங்கள் உள்ளன.அதனைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய மணிநேரத்திற்கு 15 டொலர்கள் வழங்கப்படுகிறது.
சுரங்க பணியாளர் பணியானது ஆபத்ததான பணியாகும். மோசமான காலநிலையில் மேற்கொள்ளப்படும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தொழிலாகும். இந்த வேலைக்கு யாரும் செல்ல விரும்பாத நிலையில், வருடத்திற்கு 1 லட்சத்து 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை சம்பாதிக்க முடியுமாம். அதாவது, இந்திய மதிப்பில் இது ரூ.94 லட்சமாகும்.
குற்ற இடங்களை சுத்தம் செய்யும் பணி
எம்பால்மர் பணியானது இறந்தவர்களின் உடலில் உள்ள இரத்தத்தை எடுத்துவிட்டு, நரம்புகள் வழியாக ஒருவித திரவத்தை செலுத்தி உடலை தயார் செய்ய வேண்டும்.இந்த வேலையை மேற்கொள்பவர் எம்பால்மர் என்று கூறப்படுகிறார். பலரும் விரும்பாத இந்த தொழிலுக்கு 78,000 டொலர்கள் வரை ஊதியம் உள்ளது. இந்திய மதிப்பில் இது 63 லட்ச ரூபாயாகும்.
குற்ற இடங்களை சுத்தம் செய்யும் பணியானது குற்றம் நடந்த இடங்களை காவல்துறை ஆய்வு செய்த பிறகு, அந்த இடத்தை சுத்தம் செய்வதாகும். அவர்களுக்கும் உலகளவில் நல்ல சம்பளம் உள்ளது. அதாவது 72,000 டாலர்களுக்கு மேல் இவர்கள் சம்பளம் பெறுகிறார்கள். அதாவது இது இந்திய ரூபாய் மதிப்பில் 60 லட்சமாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |