முதல் தோல்வியை தழுவிய சிஎஸ்கே: தடுமாற வைத்த டெல்லி கேப்பிடல்ஸ்
புதிய இணைப்பு
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குஎதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியை தழுவி இருக்கிறது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி, ஐந்து விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை பெற்றது.
அதனை தொடர்ந்து, களம் இறங்கிய சிஎஸ்கே அணி 7 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 பெற்று தோல்வியை தழுவியது.
முதலாம் இணைப்பு
ஐ.பி.எல். தொடரில் இன்றைய நாளிள் இரண்டாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
மிகுந்த எதிர்ப்பார்ப்பு மிக்க இந்த போட்டியானது, விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வெற்றிக்கொண்டது.
இரண்டாவது போட்டியில் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தியது. இந்நிலையில் மூன்றாவது வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு இரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மூன்றாவது வெற்றி
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும் அடுத்த ஆட்டத்தில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்சிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.
எனவே, முதல் வெற்றியை பெறும் நோக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து, 2 போட்டிகளில் வெற்றிப்பெற்று உள்ளதால் வலுவான நிலையில் உள்ளது.
சென்னை அணியில் துடுப்பாட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜாவும், பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், தீபக் சாஹர், துஷர் தேஷ்பாண்டே, பதிரனாவும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பலம் சேர்த்துள்ளது.
முதல் வெற்றி
இந்நிலையில், முதல் வெற்றியை பெறும் நோக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மூன்றாவது வெற்றியை பெறும் நோக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் காணப்படுவதால் போட்டி விறு விறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.
மேலும், இதுவரை சென்னை அணியின் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
இன்றைய போட்டியானது விசாகப்பட்டனத்தில் நடைபெறவுள்ளதால் சென்னை அணிக்கு சாதகமாக இருக்குமா என்ற எண்ணம் கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |