ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்!
ஐபிஎல் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் பலர் வெளியாகியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது லக்னோ அணியில் இருந்து டேவிட் வில்லி தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரானது கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாகியது.
இங்கிலாந்து வீரர்கள்
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் தொடரில் அவுஸ்திரேலியா, தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து,இங்கிலாந்து, பங்களாதேஸ்,இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துக் கொள்வார்கள்.
ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்படும் வீரரகள் காயம் காரணமாக சில நேரங்களில் விளையாட முடியாமல் போகலாம். சில வீரர்கள் தனிப்பட்ட காரணத்திற்கான ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறலாம்.
சிலர் சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதால் தொடரிலிருந்து வெளியேறலாம். இந்நிலையில் தொடர்ச்சியாக சில இங்கிலாந்து வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
ஐபிஎல் 2024
ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து ஏற்கனவே விலகியிருந்தனர்.
ஜேசன் ராய், ஹாரி ப்ரூக் ஆகியோர் தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவாகவும் தெரிவித்திருந்தனர். மார்க் வுட் மற்றும் அட்கின்சன் ஆகியோரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளையாட வேண்டும் என அறிவுறுத்தியிருந்த நிலையில் விலகியிருந்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது லக்னோ அணியில் இருந்து டேவிட் வில்லி தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.
பட்லர், பிலிப் சால்ட், சாம் கர்ரன், பேர்ஸ்டோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடரில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |