தமிழினத்தின் பாதையில் அடேல் பாலசிங்கத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பு
விடுதலை வேட்கை கொண்ட தமிழினத்தின் விடிவு கோரிய பாதையில் விலைமதிப்பற்ற பங்களிப்பை நல்கிய ஒரு ஒருவர்தான் அடேல் பாலசிங்கம்.
ஈழத்தமிழர்களின் தேசக்கனவை தன் நேசத்திற்குரியதாக கொண்டு உலகமெங்கும் பறந்து திரிந்து இராஜதந்திரிகளின் பார்வைகளில் ஈழத்தமிழர்கள் தனித்தேசமொன்றிற்குரியவர்கள் என்ற நிலைப்பாட்டை முன்வைத்த இராஜபறவையின் துணைப்பறவையே இவர்.
காலம் இடம் கொடுத்தபடி ஈழத்தமிழரின் வரலாற்று வாழ்வியல் குறிப்புகளில் நம் தத்துவ மேதையின் அதி உத்தம பணியில் உடனிருந்து தேசத்தலைமையின் காலப்பெருங்கனவுக்காய் கரை தேடி அலைந்தவர்களில் இவருமொருவர் நம் நேசத்திற்குரிய தேசத்தின் குரல் நேசித்த இதயத்தின் சொந்தக்காரர்.
ஈழத்தமிழர்களை தன் சொந்தமென வரித்து நம் கனவுகளை சுமந்து ஒரு காலத்தில் நம் நம்பிக்கையாய் வலம் வந்த அடேல் பாலசிங்கத்தின் தொகுப்பை சுமந்து வருகிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |