திருகோணமலையில் சுற்றிவளைக்கப்பட்ட இரவு நேர உணவகங்கள்!
திருகோணமலையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய சில இரவு நேர உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று (29-01-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூதூர் சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் சில இரவு நேர உணவகங்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட சுகாதாரம்
சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நூர் முகம்மது கசாலி தலைமையில் மாலை 6.00 மணியளவில் குறித்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்த திடீர் பரிசோதனையின் போது, சில உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பு முறைகள், சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் பணியாளர்களின் தனிப்பட்ட சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களில் பல குறைபாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவகங்கள்
இதையடுத்து, சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான மீறல்கள் இடம்பெறாமல் இருக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில், இவ்வாறான சுகாதார பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து உணவக உரிமையாளர்களும் சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |