சிறைவாசம் அனுபவிக்கும் பிக்குமார்களின் பெயர்ப்பட்டியல்: மகாநாயக்க தேரர்களிடம் ஒப்படைப்பு
Sri Lanka
Prisons in Sri Lanka
Prison
By Shalini Balachandran
தற்போதைக்கு இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைவாசம் அனுபவிக்கும் பிக்குமாரின் பெயர்ப்பட்டியல் மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன் முதற்கட்டமாக பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் சிறைவாசம் அனுபவிக்கும் பிக்குமாரின் பெயர்ப்பட்டியல் ஒன்றைத் தயாரித்துத் தருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் பிரகாரம் தற்போதைக்கு குறித்த பெயர்ப்பட்டியல் பௌத்த விவகாரங்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பெயர்ப்பட்டியல்
குறித்த பெயர்ப்பட்டியலை உடனடியாக மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி