விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!!
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
By Kanna
12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயு சிலின்டர்களையும் நாளைய தினம் விநியோகிக்கப்போவதில்லையென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு பொதுமக்கள் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய விநியோகம்
இன்றைய தினம் மேல் மாகாணத்துக்கு லிட்ரோ எரிவாயு விநியோகிக்கும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் லிட்ரோ எரிவாயு விநியோகம்இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில நாட்களில் மீண்டும் விநியோகம்
எதிர்வரும் சில நாட்களில் மீண்டும் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி