நள்ளிரவு முதல் குறைகிறது எரிவாயுவின் விலை..! விலை விபரம் உள்ளே
Sri Lanka Economic Crisis
Litro Gas
Litro Gas Price
By Kanna
லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று (5) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
உலக சந்தையின் எரிவாயு விலையைக் கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய, எரிவாயுவின் விலையை குறைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
விலை விபரம்
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4,551 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1827 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டு 848 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

