500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள சமையல் எரிவாயு - வெளியான தகவல்
Litro Gas
Litro Gas Price
Laugfs Gas Price
By pavan
சர்வதேச சந்தையின் தற்போதைய விலையுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக, கடந்த ஜனவரி 4ஆம் திகதி சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டது.
தற்போதைய விலை

தற்போது சந்தையில் 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 4,409 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு 5,300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி