உடனடியாக அனுப்புங்கள் - வெளிநாடொன்றிடம் லிட்ரோ நிறுவனம் அவசர கோரிக்கை
ஓமான் நிறுவனத்திடம் அவசர கோரிக்கை
இலங்கையில் எரிவாயுவிற்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் எரிவாயு நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
(PKM6TC)
முதற்கட்ட கலந்துரையாடல்கள்
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓமானிலிருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல்கள் அண்மையில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த ஒப்பந்த நடவடிக்கைக்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு அந்நிறுவனத்திடம் கோரியுள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

