உள்ளூராட்சி தேர்தல் -மொட்டு கட்சி எடுத்துள்ள கடுமையான முடிவு
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
Election
By Sumithiran
பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் எவருக்கும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட நியமனம் வழங்கப்பட மாட்டாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசியலில் பிரவேசித்து தமது பெயரைக் கெடுத்துக் கொண்ட பல உள்ளுராட்சி மட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சியில் இருப்பதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வேட்புமனு வழங்கப்படவில்லை
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தெரிவு தொடர்பான முழுமையான விசாரணைகளில் இவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்