கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது - தேர்தல் ஆணைக்குழு திட்டவட்டம்!
மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இயலாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்காக கட்சிகளினால் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுக்கள் இரத்து
"தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும்.
இவ்வாறு, வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டால் மாத்திரமே கட்டுப்பணத்தை திருப்பி வழங்க முடியும்" என சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
