உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சடிப்பது தாமதமாகும் - அரச அச்சகம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ம் திகதி நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் கால தாமதம் ஏற்படும் என அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்குச் சீட்டு அச்சடிப்பதற்கு தேவையான பணம் இன்னும் அரச அச்சகத்துக்கு வரவில்லை என அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு தேவையான பணம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக அரசாங்க அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
இருப்பினும் இதுவரை அரச அச்சத்திற்கு 40 மில்லியன் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேர்தலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக தேவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் கடந்த 8 ஆம் திகதி நிதியமைச்சுக்கு தெரிவித்துள்ளது.
