நான்கரை ஆண்டுகளுக்கு தேர்தலினை நடத்தாமலிருக்க திட்டம்..!
Election Commission of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lankan local elections 2023
By Kiruththikan
எதிர்வரும் நான்கரை ஆண்டுகளுக்கு தேர்தலினை நடத்தாமலிருக்க அதிபர் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டமைக்கான தகவல்கள் உண்டு எனவும், அண்மையில் இது குறித்து நாடாளுமன்றிலும் பேசப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை உடைத்தெறிவதாகவும், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சரித ஹேரத் தெற்கு ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,

4ம் ஆண்டு நினைவஞ்சலி