ஹட்டன் - கொழும்பு வீதியில் பள்ளத்தில் கவிழ்ந்த லொறி : மூவர் காயம்!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணித்த லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீதியில் பொல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட கலுகல சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகே இன்று (03) காலை சுமார் 5:30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்பு - கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி கட்டுப்பாட்டை இழந்து பிரதான விதியிலிருந்து விலகிச் சென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பலத்த சேதமடைந்த லொறி
இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் மேலும் இருவர் காயமடைந்து கித்துல்கல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொல்பிட்டிய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்தில் லொறி பலத்த சேதமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |