வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பாரவூர்தி
Badulla
Sri Lanka Police Investigation
Accident
By Jaso
பதுளை-மஹியங்கனை வீதியில் உள்ள மடித்தளை பகுதியில் ஒரு வீட்டின் மீது பாரவூர்தி ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தையும் அவரது மகனும், அத்துடன் பாரவூர்தியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேக் தொழிற்படாமையால் விபத்து
பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற குறித்த பாரவூர்தியின் பிரேக் தொழிற்படாமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாரவூர்தி விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் மோதியதுடன், பின்னர் சுமார் 75 அடி பள்ளத்தில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடு ஒன்றின் மீது கவிழ்ந்துள்ளது.
இவ்விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி