அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர்கல்வி பற்றிய ஆலோசனைக் உபகுழுவின் முன்னிலையில் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்புக்கு அனுமதி
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகச் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |