அநுர அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சாவகச்சேரி மக்கள்
அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையை வலியுறுத்தில் இந்தப் போராட்டம் இன்று (12.09.2026) ஆரம்பமாகியுள்ளது.
யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் ஆரம்பமான போராட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த சி வி கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினரும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது தரப்பினரால் அழைப்பு
இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பொது தரப்பினரால் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |