விசாரணையை புறக்கணிக்கும் மொட்டுக் கட்சி முன்னாள் எம்.பி! மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்பு
SLPP
Sri Lankan Peoples
FCID - Financial Crimes Investigation Division
Janaka Thissakuttiarachchi
By Dhilak
சிறலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டிஆரச்சி, இந்த மாதம் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இம்மாதம் 8 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அன்றைய தினம் அவர் முன்னிலையாகவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீண்டும் அழைப்பாணை
ஊவா கெப்பிட்டல் வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் அளிப்பதற்கே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, முதல் அழைப்பின் போது குட்டிஆரச்சி முன்னிலையாகாத நிலையில், அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்