சீட்டிழுப்பில் கோடிக்கணக்கான பணம் - உரிமை கோரி அலைமோதும் மக்கள்
Lottery
Canada
By pavan
கனடாவில் 70 மில்லியன் டொலர் பணப் பரிசுத் தொகையை பலரும் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு லொத்தர் சீட்டிழுப்பில் வென்றெடுக்கப்பட்ட இந்த பரிசுத் தொகை இதுவரையில் உரிமை கோரப்படவில்லை.
இந்த மாதம் 28ம் திகதி லொத்தர் சீட்டு காலாவதியாக உள்ளது.
760 பேர் தொலைபேசி அழைப்பு
இந்த லொத்தர் சீட்டு தங்களுடையதாக இருக்கக் கூடும் எனக் கூறி சுமார் 760 பேர் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளனர்.
கனடிய வரலாற்றில் மிகப் பெரிய தொகை பரிசுப் பணம் வென்றெடுக்கப்படாத சந்தர்ப்பம் இதுவாக பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
லொத்தர் சீட்டு தொலைந்து விட்டதாக கூறி பரிசு பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிலர் தொலைபேசி அழைப்பு மேற்கொள்கின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்