இறுதி யுத்தம் முதல் அவுஸ்திரேலியா வரை - தலைவர் பிரபாகரன் பற்றி விலகாத மர்மம்..!
அண்மைக் காலமாகவே வேலுபிள்ளை பிரபாகரன் தொடர்பிலான பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன.
அதாவது விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் என சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பழ. நெடுமாறன் தெரிவித்து சர்ச்சையை உருவாக்கினார்.
அத்துடன், சமீபத்தில் பிரபாகரனின் துணைவியார் மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக புதிய தகவல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் குறித்து, மூத்த ஊடகவியலாளர் உமாபதி, ஐ.பி.சி தமிழிற்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
மன அழுத்தத்தின் வெளிப்பாடு
“இதனை ஒரு நகைச்சுவையாகவே பார்க்க முடியும். இவ்விடயம் மிக தீவிரமான விடயம். ஆனால் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் நகைச்சுவைதான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அத்தோடு இவ்வாறான செய்திகளை பரப்புகை செய்பவர்களை தவறான கண்ணோட்டத்திலும் பார்க்க முடியாது.
காரணம் அவர்கள் மிகுந்த மன அழுத்ததிற்கு ஆளானவர்கள். யுத்தத்தில் பல இழப்புக்களையும் சந்தித்துள்ளார்கள்.
இதனை நான் மன அழுத்தத்தின் வெளிப்பாடகவே பார்கிறேன்” என்றார்.
இதுதொடர்பான மேலதிக தகவல்களை இக்காணொளி பதிவின் மூலமாக அறிந்துக்கொள்ளலாம்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 14 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)