சரவெடியை கொழுத்திப்போடும் புல்லுருவிகள்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் முடிந்து 14 வருடங்கள் உருண்டோடி விட்டன.
வன்னியில் நடைபெற்ற இந்த ஊழி பேரவலத்தில் கொத்து கொத்தாக தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு சிறிலங்கா அரசாங்கம் நடத்திய கோர தாண்டவம் அது.
ஆனால் இன்றுவரை தமிழ் மக்கள் எவரும் கொன்றொழிக்கப்படவில்லை என சிங்கள தேசம் மறுத்து வருகிறது.
இவ்வாறு சிங்கள தேசம் தமிழர் படுகொலையை அப்பட்டமாக நிராகரித்து வரும் நிலையில் தமிழர்களுக்குள் இருக்கும் சிலர் சரவெடியை காலத்திற்கு காலம் கொழுத்திப் போடுகின்றனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன்
அதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் என சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பழ. நெடுமாறன் தெரிவித்து சர்ச்சையை உருவாக்கினார்.
அதேபோன்று இப்போது விடுதலைப்புலிகளின் தலைவரின் துணைவியார் மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக புதிய தகவல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இவ்வாறு கதைகளை கட்டி விடுவது புலம்பெயர் தேசத்தில் வாழ்பவர்களை மகிழ்சிப்படுத்துவதற்கு வசதியாக இருக்கலாம். ஆனால் தாயகத்தில் வேதனைகளால் நொந்து கெட்டுப் போன மக்களிடம் இந்தக் கதைகள் எதுவும் எடுபடாது என்பதோடு மேலும் மேலும் அவர்களை துன்பத்திற்கே தள்ளும் என்பதை இதை வெளியிடுபவர்கள் ஏன் விளங்குவதாக தெரியவில்லை.
இந்த கதைகளை அவிழ்த்து விடுபவர்கள் யார்? தாயகத்தில் உள்ளவர்களா இல்லை. மாறாக புலம்பெயர்தேசத்தில் மிகவும் பாதுகாப்பாக சுகபோகம் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களே.
அப்படியென்றால் இவர்களின் அறிவிப்பிற்கு பின்னால் ஏதாவது மறைமுக நிகழ்ச்சி நிரல் உள்ளதா?
முன்னாள் போராளிகளின் வாழ்வு
யுத்தம் முடிந்து சரணடைந்து காணாமற்போன போராளிகளை விடவும் 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி தற்போதும் தாயகத்தில் நடை பிணங்களாக பலர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான அறிவிப்புகளால் அவர்களின் வாழ்வு மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்வதையா இவர்கள் விரும்புகிறார்கள்.
இந்த பொய்யான அறிவிப்புகளை விடுத்து மனம் கனத்தாலும் சில துயரமான உண்மைகளை ஏற்றுத்தான் நாம் ஆக வேண்டும்.
ஆகவே தாயகத்தில் வாழும் முன்னாள் போராளிகள் மீண்டும் படையினரின் கழுகுப் பிடிக்குள் செல்வதை தவிர்க்க உண்மையை கூறுங்கள் அது அனைவருக்கும் உதவும்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 17 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)