சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் (India) கர்ப்பிணி பெண் ஒருவர் தகாதமுறைக்குட்ப்படுத்தப்பட்டு ஓடும் தொடருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ள சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா (Andhra Pradesh) மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வந்துள்ளார்.
பாரிய அதிர்ச்சி
இந்த நிலையில், நேற்று (06) தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கோயம்புத்தூர் - திருப்பதி செல்லும் இன்சிர் சிட்டி விரைவு தொடருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது குறித்த பெண், தொடருந்தில் கழிவறைக்கு சென்ற நிலையில் அங்கு நபரொருவரால் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணை தொடருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட கர்ப்பிணி
இந்தநிலையில், தொடருந்தில் இருந்து கீழே விழுந்தமையால் கர்ப்பிணிக்கு கை கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தொடருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்ட கர்ப்பிணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்ப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த கர்ப்பிணி பெண்ணிடம் தொடருந்துகளில் குற்றங்களை செய்யும் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை காண்பித்து தொடருந்து நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்போது கர்ப்பிணி பெண், நபரொருவரை அடையாளம் காட்ட அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 12 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)