தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு
European Union
Sri Lankan Tamils
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஆறு மாதங்களால் நீடித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக, உலகளாவிய ரீதியில் உள்ள பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் நபர்களாக பெயரிடப்பட்டு தடை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்றைய தினம் மீளாய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
நிதிகள் முடக்கம்
இதற்கமைய, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் ஆறு மாதங்களால் ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் படி, தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் நிதிகள் முடக்கப்படுமெனவும், குறித்த அமைப்புகள் தனிநபர்களிற்கு நிதி வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்