பாம்புக்கடிக்கு இலக்கான மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி உயிரிழப்பு!
Mullaitivu
Tamil
By pavan
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் கிழவன்குளம் பகுதியில் வசித்து வந்த மாறுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையான குறித்த முன்னாள் போராளி கிழவன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதையடுத்து குறித்த நபர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் குறித்த நபர் நேற்று (16) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் (வயது-47) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி