விடுதலைப் புலிகள் இயக்கம் யாருக்கு சொந்தமானது - இராணுவ ஆய்வாளரின் பதில்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழினத்திற்கு சொந்தமானது. அதனை யாரும் உரிமைகோர முடியாது என இராணுவ ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே திபாகரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு தரப்புகளை கடந்து விடுதலைப் புலிகள் அமைப்பு 1976 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருடன் வெளிவந்தது.
இறுதி யுத்த காலத்தில் போராளிகள் சுயவிருப்பின் படி, சுய முடிவுகளை எடுக்கலாம் என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தனது கையெழுத்து இட்டு எழுதிக்கொடுத்துள்ளார்.
அந்தக் கணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை யாரும் உரிமைகோர முடியாது. இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழினத்திற்கு சொந்தமானது.
அதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பொதுவுடைமையாக்கப்பட்டது.
இப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் இல்லாத போது, இதை மற்றவர்களும் மூன்றாம் உலக நாடுகளும் உரிமைக்கொள்வது எந்த விதத்தில் நியாயமானது என்பது புரியவில்லை” - என தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகளை நேசித்த ஈழ அன்னையர்களின் குறியீடுதான் அன்னை பூபதி 16 மணி நேரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்