உலகையே திரும்பிப்பார்க்க வைத்த விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகள்!
1990 ம் ஆண்டு ஜூன் மாதம் 10 ம் திகதி இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பமாகி, பயங்கரமான சண்டைகள் வடக்கு கிழக்கு முழுவதும் நடைபெற்றன.
இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பித்த தருணம் சிறிலங்கா படையினர் தமிழீழ விடுதலை புலிகளை விட பல மடங்கு பலமடைந்தவர்களாக இருந்தனர்.
அமெரிக்கா, இஸ்ரேல், பாக்கிஸ்தான், தென்னாபிரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் பக்க பலத்துடன் களமிறங்கிய சிறிலங்கா இராணுவம் பலமடங்கு பலம் பெற்றிருந்தது.
முதலாம் கட்ட ஈழ யுத்தத்தில் விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் தளம் இருந்தது, ஆனால் இரண்டாம் கட்ட ஈழ யுத்தத்தில் இந்தியாவில் அவர்களுக்கு தளம் இல்லை.
இந்தியாவை விரோதித்து விட்டதாக, இந்தியாவின் ஆதரவும் அவர்களுக்கு கிட்டவில்லை.
இந்திய படையுடன் நடந்த மோதலில் இருந்தது போல சின்னாபின்னமான நிலையிலே விடுதலைப்புலிகள் இருப்பதாக சிறிலங்கா இராணுவம் கருதியது. அந்த சமயம், தமிழ் அமைப்புக்கள் பலவும் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக நின்றன.
வல்லரசு நாடுகளின் பாரிய இராணுவ பயிற்சிகளின் உதவியுடன் சிறிலங்கா இராணுவம் பாரிய உத்வேகத்துடன் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களை வேகமாக ஆக்கிரமிக்க புறப்பட்டார்கள்.
சிறிலங்கா இராணுவத்தின் வேகத்தை தடுத்து நிறுத்தியதாக விடுதலைப்புலிகளின் ஜொனி மிதி வெடிகள் இருந்தன.
வடக்கு கிழக்கு முழுவதும் ஆயிரக்கணக்கில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஜொனி மிதி வெடிகள் சிறிலங்கா இராணுவத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்தது.
குறைந்த செலவில், நுட்பமான தொழில்நுட்பத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தயாரித்திருந்த இந்த மிதி வெடிகள் ஸ்ரீலங்கா படையினருக்கு பெரும் இடையூறாக இருந்தது.
இது சிறிலங்கா படைகளின் உளவியலை பெரிதும் பாதிப்படைய வைத்தது.
(இது பற்றிய முழுமையான விடயங்களுக்கு கீழே உள்ள காணொளியை பாருங்கள்)
