தலைமைத் தளபதியாகிறார் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி!
LTTE Leader
Kerala
India
By Kalaimathy
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் 36 வருடங்களுக்கு முன்னர் ஈடுபட்ட, இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர், இந்திய தெற்கு விமானப்படையின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஏயார் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் என்பவரே, இந்திய தெற்கு விமானப்படையின் தலைமைத் தளபதியாக நேற்று முன்தினம் பதவியேற்றார்.
இவர் ஒரு போர்த் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் ஆவார். அதேவேளை அதி விசேட சேவை பதக்கம் மற்றும் வாயு சேனை பதக்கம் ஆகிய அரச தலைவர் விருதுகளையும் வென்றுள்ளார்.
உயரிய விருது

1986 இல் இந்திய விமானப்படையில் இவர் பணியமர்த்தப்பட்டார். பல்வேறு வகையான உலங்கு வானூர்திகள் மற்றும் நிலையான இறக்கை விமானங்களில் 5,400 மணிநேரங்களுக்கு மேல் பறந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி