தோல்விகண்ட வல்லரசுகள்

United States of America LTTE Leader India Liberation Tigers of Tamil Eelam Indian Peace Keeping Force
By Niraj David Jan 19, 2024 01:01 PM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

இருபதாம் நூற்றாண்டின் போரியல் வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது, அதில் நான்கு மிகப் பெரிய இராணுவத் தோல்விகள் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

உலகின் மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்புகளுக்கு சரித்திரத்தில் ஏற்பட்ட மிகவும் மோசமான தோல்விகள் என்று நான்கு சந்தர்ப்பங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றன.

முதலாவது: அமெரிக்கப்ப படைகளுக்கு வியட்னாமில் ஏற்பட்ட மிக மோசமான தோல்வி. இரண்டாவது: சீனப் படையினருக்கு கம்போடியாவில் ஏற்பட்ட தோல்வி. மூன்றாவது: சோவியத் படையினருக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்வி. நான்காவது இந்தியப் படையினருக்கு ஈழத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி.

உலகின் மிகப் பெரிய நாடுகளின் பலம் வாய்ந்த இராணுவத்தினருக்கு சிறிய கொரில்லாப் படையினரிடம் ஏற்பட்ட மிக மோசமான தோல்விகளாக இவை சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

ஒப்பீட்டளவில் மிகச் சிறியதும், எண்ணிக்கையில் குறைந்ததும், ஆயுத தளபாட வசதிகளற்றதுமான சிறிய கொரில்லாக் குழுக்கள், தமது மன உறுதியையும், மக்கள் ஆதரவையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு போரிட்டு, உலகின் மிகப் பெரிய சக்திகளை புறமுதுகு காண்பித்து ஓட்டமெடுக்கச் செய்திருந்த சந்தர்ப்பங்களாக இவற்றைச் சரித்திரம் பதிவு வைத்துள்ளது.

தோல்விகண்ட வல்லரசுகள் | Ltte War India Srilanka Prabakaran Tamil Army Chin

அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் படைகள் புரிந்ததான யுத்தங்கள் பற்றிப் பார்த்தோமானால், அவற்றில் பல ஒற்றுமைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நாடுகள் அனைத்துமே தமக்காக யுத்தம் புரியவில்லை. வேறொரு தரப்பினருக்காகவே இந்த நாடுகளின் படைகள் களம் இறங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டின் படைகள் களம் இறங்குமுன்னதாக, அவர்கள் தங்களது எதிரிகள் பற்றி நன்றாகவே அறிந்துவைத்திருந்தார்கள். ஆனால், அவர்கள் தமது எதிரியின் உண்மையான பலம் பற்றி சரியாகக் கணிப்பிடவில்லை.

அவர்கள் தமது வரலாற்றில் படித்திராத பாடங்கள் பலவற்றை யுத்த முனைகளில் கற்கவேண்டி ஏற்பட்டது. இறுதியில் இந்த நான்கு பாரிய நாடுகளின் இராணுவங்களும் யுத்தத்தை முடித்துக்கொண்டு தத்தமது நாடுகளுக்கு திரும்பும்போது, இனிமேல் இந்தப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுப்பதில்லை என்ற தீர்மானத்துடன்தான் திரும்பியிருந்தார்கள்.

அதேவேளை இந்த பெரிய நாடுகளின் படைகளுடன் யுத்தம் புரிந்த கொரில்லா அமைப்புக்களோ, யுத்த முடிவில் பாரிய பலத்தை பெற்றவைகளாக மாறியிருந்தன.

பல மடங்கு வளர்ச்சி அடைந்திருந்தன. அதிகமாக ஆயுத வளத்தைப் பெற்ற அமைப்புக்களாக மாறியிருந்தன. சர்வதேச நன்மதிப்பைப் பெற்றுப் பிரபல்யமடைந்திருந்தன.

பரவலான மக்கள் ஆதரவைப் பெற்றவையாகவும் ஆகிவிட்டிருந்தன.

ஈழ யுத்தம்

இதில் ஈழத்தில் இடம்பெற்ற இந்தியாவின் யுத்தத்தை எடுத்து நோக்கினால், இந்தியப் படையினர் – விடுதலைப் புலிகள் – இருவருக்குமே பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

புலிகளால் அந்த இழப்புக்களை ஜீரணித்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்தியாவினாலோ அதற்கேற்பட்ட இழப்புக்களை தாங்கிக்கொள்ளமுடியாது போய்விட்டது.

இதுவே ஈழத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாரிய தோல்வி என்று குறிப்பிடப்படுகின்றது. ஈழயுத்தத்தைப் பொறுத்தவரையில் அந்த யுத்தத்தை தாம் விரும்பியபடி தமது போக்கிற்கு இழுத்துச் செல்லும் சக்தியை விடுதலைப் புலிகள் பெற்றிருந்தார்கள்.

தோல்விகண்ட வல்லரசுகள் | Ltte War India Srilanka Prabakaran Tamil Army Chin

இந்தியாவினால் அது முடியாமல் இருந்தது. ஒரு கால வரையறையை வகுத்துக்கொண்டு, அல்லது ஒரு திட்ட வரைபை மேற்கொண்டு இந்தியாவினால் எதுவுமே காரியமாற்ற முடியாமல் இருந்தது.

அவ்வாறு செய்வதற்கு களமுனைகளில் புலிகள் அனுமதியளிக்கவும் இல்லை. விடுதலைப் புலிகளுக்கும்-இந்தியப்படையினருக்கும் இடையிலான யுத்தம் பற்றிக் குறிப்பிடும் பிரபல விமர்சகர் ஒருவர்: ‘இந்தியப் படைகளின் எதிரிகள் (புலிகள்) அனைத்து இடங்களிலும், அனைத்து நேரமும் காணப்பட்டார்கள்.

ஏனெனில் அந்த மண் அவர்களுடையதாக இருந்தது. அந்த மண்ணின் ஒவ்வொரு அங்குலம் பற்றியும் அவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் தமிழ் மக்களின் கதாநாயகர்களாக இருந்தார்கள்ள. ஏனெனில் அந்த மக்கள் மத்தியில் இருந்தே அவர்கள் உருவாகியிருந்தார்கள்.

அவர்கள் தமிழ் மக்களால் வழி நடத்தப்பட்டவர்களாகவும், தமிழ் மக்கள் மத்தியில் தங்கியிருப்பவர்களாகவும், தமிழ் மக்களின் பூரண ஆதரவைப் பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியப் படைகளுக்கு இருந்த சிக்கல்கள்

புலிகளுடனான இந்தியப் படைகளின் யுத்தம், அமெரிக்கா, சீனா, சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளின் இராணுவம் மேற்கொண்ட யுத்தங்களில் இருந்து சில வகைகளில் வேறுபட்டதாகவும் இருந்தன.

முதலாவதாக, இந்தியப் படைகள் சுமார் இரண்டு வருட காலமாகப் போர் புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது, அடிப்படையில் இந்தியாவினாலேயே பயிற்றுவிக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பிற்கு இந்தியாவினாலேயே ஆயுதமும் வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் முக்கிய புலனாய்வுப் பிரிவான ரோ (RAW) இனாலேயே விடுதலைப் புலிகளின் யுத்த நுனுக்கப் பயிற்சிகளின் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, இந்தியாவின் போரியல் நுணுக்கங்கள், இந்தியப் படையினரிடமுள்ள ஆயுத விபரங்கள், அவர்களது மனோதத்துவங்கள் என்பன பற்றி புலிகள் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள்.

இந்தியப் படை வீரர் ஒருவரின் மனோநிலை எவ்வாறு இருக்கும், அவரது பலம் என்ன, பலவீனம் என்ன என்பது பற்றி புலிகள் அமைப்பினர் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். அதேவேளை, விடுதலைப் புலிகள் தொடர்பாக இந்தியப் படையினர் கொண்டிருந்த அறிவு போதுமானதாக இருக்கவில்லை என்றே இந்தியப் படை அதிகாரிகள் பின்நாட்களில் குறிப்பிட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியப் படைகளிடம் இருந்து தமது ஆரம்பகாலப் பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் தமக்கே உரிய பாணியில் தமது யுத்த தந்திரோபாயங்களை வடிவமைத்திருந்தார்கள்.

உலகின் தலை சிறந்த கொரில்லா யுத்தங்களில் காணப்பட்ட பல வெற்றிகரமான நுனுக்கங்களையெல்லாம் உள்வாங்கியிருந்தார்கள். கொரில்லாப் போரில் பல புதிய யுக்திகளைக் கண்டு பிடித்து, பரிட்சித்துப் பார்த்து உள்வாங்கி இருந்தார்கள்.

புலிகள் அமைப்பில் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த மாற்றங்கள் களமுனையில் இந்தியப் படையினருக்கு அதிக அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதாகவே இருந்தன.

தோல்விகண்ட வல்லரசுகள் | Ltte War India Srilanka Prabakaran Tamil Army Chin

இந்தியப் படை புலிகளுடன் நேரடி யுத்தத்தில் குதிப்பதற்கு முடிவு செய்து, அதற்கான ஆலோசனைகளை இந்திய புலனாய்வு பிரிவான ‘றோ இடம் கோரிய போது, ‘பிரபாகரனும் அவரது போராளிகளும் நகரப் புறங்களில் சண்டைகள் புரிவதற்கு தோதான தகமைகளை மட்டுமே கொண்டிருக்கின்றார்கள். கிராமங்களிலும், காடுகளிலும் அவர்களால் அவ்வளவாகச் செயற்பட முடியாது என்று தெரிவித்திருந்தது.

ஆனால் யுத்த களத்தில் ‘றோ அமைப்பின் இந்த அனுமாணம் பொய்த்திருந்தது. நகரங்கள், கிராமங்கள், காடுகள், வயல்கள் என்று இந்தியப் படைகள் கால்வைத்த அத்தனை இடங்களிலும், விடுதலைப் புலிகள் அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். ஈழ மண்ணில் இந்தியப் படைகள் வைத்த ஒவ்வொரு அடியும் மரணத்தை நோக்கியதாகவே இருந்தது.

இந்தியப் படையினரின் போரியல் நுனுக்கங்கள் பற்றிய வரைபுகளை மேற்கொண்ட அறிஞர்கள், ஈழ யுத்தத்திற்கு பின்னர் தமது வரைபுகளில் பல மாற்றங்களையும், புதிய பல விடயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு, ஈழ மண்ணில் அவர்கள் பல அவலங்களையும், ஆச்சரியங்களையும் சந்தித்தார்கள்.

தமது போரியல் யுக்திகளில் பல மாற்றங்களைச் செய்தேயாகவேண்டிய பல அனுபவங்களை அவர்கள் ஈழ மண்ணில் பெற்றிருந்தார்கள்.

மொத்தத்தில் இந்தியா வருந்தி அழைத்துக்கொண்ட விடுதலைப் புலிகளுடனான யுத்தம், இந்தியத் தரப்பினருக்கு சிம்ம சொப்பன அனுபவத்தையே பெற்றுத்தந்திருந்தது.

புலிகளுடனான யுத்தத்தை எதற்காக ஆரம்பித்தோம் என்று ஒவ்வொரு இந்திய அரசியல்வாதியும், ஒவ்வொரு இந்திய இராணுவ அதிகாரியும் – ஏன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இன்றளவிற்கும் வருந்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

புலிகளுடனான இந்தியாவின் யுத்தம் சர்வதேச அரங்கிலும், உலகின் சரித்திரத்திலும் அந்நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழுக்கை பெற்றுக்கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

உலகின் தலைசிறந்த இராணுவங்களுள் ஒன்றான இந்திய இராணுவத்துடன், ஒரு சிறிய கொரில்லாப்படை ஈழ மண்ணில் மேற்கொண்ட ஒப்பற்ற யுத்தம் பற்றியும், அந்த யுத்த முனைகளில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பவங்கள், திருப்பங்கள் என்பன பற்றியும் இனிவரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்க்க உள்ளோம்.

யுத்த தர்மங்களை மீறி, காந்தியின் தேசம் மேற்கொண்ட துரோக நடவடிக்கைகள் பற்றியும் ஆராய உள்ளோம்.

ஆரம்பித்தது- புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை

ஆரம்பித்தது- புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985