ஒரே நிமிடத்தில் பலகோடிக்கு அதிபதியான நபர்! தேநீர் அருந்திக்கொண்டிருந்த போது அடித்த அதிர்ஷ்டம்
கனடாவின் ஓக்வில்லேவை சேர்ந்த நபர் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த போது கோடிக்கணக்கான பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
Richard Noronha (51)சுகாதார துறையில் பணிபுரியும் Richard Noronha (51) என்பவருக்கே குறித்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் தேநீர் குடித்து கொண்டிருந்த போது மின்னசல் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது வந்தது.
அதை திறந்த பார்த்த போது லொட்டோ மேக்ஸ் லொட்டரியில் $129,754 பரிசு விழுந்தது தெரியவந்தது.
அதாவது இலங்கை பணத்தில் 47446003.34 ரூபாவாகும்.
தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை
Richard கூறுகையில், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பரிசு பணத்தை வைத்து நானும் என் மனைவியும் ஆதரிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு பெரிய அளவில் நன்கொடை அளிக்கப் போகிறேன்.
மேலும், முதலில் எனது குடும்பத்தினருக்கு ஒரு நல்ல இரவு விருந்து அளிக்கவுள்ளேன் என சிரித்து கொண்டே கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.