பேராசிரியரின் அநாகரிக பேச்சு - அதிரடியாக கைது செய்தது காவல்துறை -மதுரை காமராஜர் பல்கலையில் பரபரப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் மாணவி ஒருவரின் ஜாதியை சொல்லி கிண்டல் செய்த பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியின் ஜாதி பெயரை அந்த பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் சண்முகராஜா என்பவர் சொல்லி கிண்டல் செய்ததாக தெரிகிறது.
மாணவி முறைப்பாடு
அதுமட்டுமன்றி அந்த மாணவியின் உருவத்தை வைத்தும் அவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து வரலாற்று உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த சண்முகராஜா என்பவர் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலையில் பரபரப்பு
மாணவியை கிண்டல் செய்ததால் வரலாற்று பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
