மதுரையிலிருந்தும் பலாலிக்கு விமான சேவை ஆரம்பிக்கப்படும் சாத்தியம்
Jaffna
Tamil nadu
Madurai
By Vanan
மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான விமான சேவை நாளந்தம் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிகளவான கேள்வி

யாழ்ப்பாணத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான விமான சேவைக்கு அதிகளவான கேள்வி உள்ளது.
இதனடிப்படையில், யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கான விமான சேவையை விஸ்தரிக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தப் பின்னணியில், மதுரைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் சிறிலங்கா விமான போக்குவரத்து அதிகாரசபை இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி