இலங்கையில் வெற்றிகரமாக கால்பதித்த சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட நிறுவனம்
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட மஸ்ட்ரோ புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இலங்கைப் பிரிவான மஸ்ட்ரோ புரொடக்சன்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட், புகழ்பெற்ற கலைஞர் ஹிப் ஹாப் தமிழா பங்கேற்ற ஒரு அற்புதமான இசை நிகழ்ச்சியுடன் இலங்கையில் தனது இருப்பை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
ஏப்ரல் 5 ஆம் திகதி கொழும்பில் உள்ள CR&FC மைதானத்தில் நடைபெற்ற "ரிட்டர்ன் ஒஃப் தி டிராகன் மச்சி - இலங்கை பதிப்பு" இலங்கை பொழுதுபோக்கு சந்தையில் நிறுவனத்தின் முதல் முயற்சியை தொடங்க அடி எடுத்து வைத்தது.
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம்
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட மஸ்ட்ரோ புரொடக்சன்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட், கனடா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து மற்றும் இப்போது இலங்கையில் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
இந்த மைல்கல் நிகழ்வு, பிராந்தியம் முழுவதும் புதிய சந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அனுபவங்களைக் கொண்டு வருவதற்கும், வெற்றிகரமான நேரடி நிகழ்ச்சிகளின் நிரூபிக்கப்பட்ட சாதனையை விரிவுபடுத்துவதற்கும் மஸ்ட்ரோ புரொடக்சன்ஸ் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
"இலங்கை பார்வையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்குகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்று மஸ்ட்ரோ புரொடக்சன்ஸ் குளோபலின் தலைவர் பார்த்திபன் முருகையன் கூறினார்.
