யாழ். காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு!
காரைநகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் (10.01.2026) மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.பாலச்சந்திரனால் 2018ஆம் ஆண்டு காரைநகர் சின்னாலடி வீதியை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வர்த்தமானி
அதனைத்தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தற்போதைய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர் த. செந்தூரனின் வேண்டுகோளுக்கிணங்க அமரர் மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்று பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, இன்று (10.01.2026) காலை 10.30 க்கு கெளர பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணன் கோவிந்தராஜ், உபதவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வீதிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |