வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம்! வெளியான தகவல்
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களின் கீழ், வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை ஊவா மாகாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று (09) பதுளையில் உள்ள ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையுடன் தொடர்புடைய அனைத்து பேருந்து உரிமையாளர்கள் மற்றும் வங்கி பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் கட்டண வசதி
வங்கி அட்டைகள் மூலம் டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெறும் வசதி மற்றும் அது வழங்கும் நன்மைகள் குறித்து விரிவான விழிப்புணர்வும் வழங்கப்பட்டதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையைச் சேர்ந்த அனைத்து பேருந்துகளுக்கும் இந்த டிஜிட்டல் கட்டண வசதியை சில மாதங்களுக்குள் வழங்க பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |