மஹிந்தவின் வெளிநாட்டுப் பயணம் இடைநிறுத்தம் - கோட்டை நீதவான் அதிரடி உத்தரவு
காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்ட இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (11) மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத்தை பத்து நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
நீதிமன்றில் கோரிக்கை
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தனது பிரதிவாதியை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பான மேலதிக நீதவான் விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
