மீண்டும் மகிந்த -துவண்டுபோன மொட்டு கட்சிக்கு கிடைத்த வரப்பிரசாதம்
SLFP
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில்
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தெரிவிக்கும் நோக்கில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



