மீண்டும் களமிறங்கும் மகிந்த..! சூடு பிடிக்கும் அரசியல் களம்
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலை எதிர்கொண்டு சிறிலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
மார்ச் மாதத்திற்குப் பின்னர் பொதுத் தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மகிந்த ராஜபக்ச தனது செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஒன்றிணைந்து எழுவோம்

இதனால், கிராம மட்டத்திலிருந்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படும் மாவட்ட, தொகுதி மட்டக் கூட்டங்களிலும் தானும் பங்கேற்கவுள்ளதாக மகிந்த தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்து எழுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத் தொடருடன் பிராந்திய மற்றும் கிராம மட்டத்தில் சிறிய கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு மகிந்த தனது செயற்பாட்டாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,