அனுராதபுரத்தில் திசைக்காட்டிக்கு எதிராக களமிறங்கும் மகிந்தவின் மொட்டு கட்சி

SLFP Anura Kumara Dissanayaka Sagara Kariyawasam
By Dharu Sep 12, 2026 12:54 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை வெளிப்படுத்தும் வகையிலும் அனுராதபுரத்தில் பிரம்மாண்டமான எதிர்ப்புப் பேரணி நடத்தப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும் பேரணி

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

"அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதால், உள்ளூர் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்றுக்கொள்ள முடியாமலும், அவசியமான உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

அதேபோன்று, தொடரும் எரிபொருள் விலை உயர்வின் காரணமாக கடற்றொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசு, தற்போது அவர்களை முற்றாகப் புறக்கணித்துள்ளது. நாட்டில் வேலையின்மை, வறுமை மற்றும் வாழ்க்கைச் செலவு என்பன பாரியளவில் அதிகரித்துள்ளன.

அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் வழங்குவதாகக் கூறிய அரசு, தற்போது அவர்கள் வாழ முடியாத சூழலையே உருவாக்கியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக் காலத்திலேயே நாட்டின் பிரதான பாதாள உலகக் குழுக்கள் ஒடுக்கப்பட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினர். ஆனால், தற்போதைய ஆட்சியில் தினமும் துப்பாக்கிச்சூடுகளும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

வரலாற்றில் இல்லாத வகையில் தற்போது கொள்கலன்களில் போதைப்பொருள்கள் நாட்டுக்குள் கைப்பற்றப்படுகின்றன. அண்மையில் கொண்டுவரப்பட்ட 323 கொள்கலன்களில் போதைப்பொருள்களும் ஆயுதங்களுமே இருந்தனவா என்ற நியாயமான சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற நீண்டகால பொருளாதாரப் பலன்களைத் தரும் திட்டங்களே உண்மையான அபிவிருத்தித் திட்டங்களாகும். வீதியில் மெட்ரோ பஸ்களை இறக்குவது மக்களுக்கு வசதிகளை வழங்கும் ஒரு சேவையே தவிர, அது அபிவிருத்தித் திட்டம் அல்ல.

அபிவிருத்தி பற்றிய அறிவோ திறமையோ இல்லாததால், பஸ்களை வீதியில் விட்டுவிட்டு அதையே அபிவிருத்தி எனக் கூறி அரசு மக்களை ஏமாற்றுகின்றது.

அரசு தனது திறமையின்மையை மறைப்பதற்காக, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தங்களுக்கு எதிராகச் செயற்படும் அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைக்கும் அடக்குமுறையையே செய்கின்றது.

ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அபிவிருத்திகளைச் செய்யாமல் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றார். அனுராதபுரத்தில் நடத்தப்படும் எமது பேரணிக்கு எதிர்க்கட்சியிலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026