பெரமுனவின் ஆசீர்வாதம் பெற்றவரே அதிபர் தேர்தலில் வெற்றியீட்டுவார்: மகிந்த பகிரங்கம்
இலங்கையின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் வெற்றியீட்டுவார் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று (01) இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளருடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன இணைந்து பயணத்தை மேற்கொள்ளும்.
பெரமுனவின் பலம்
பொதுஜன பெரமுன இந்த மே பேரணியின் மூலம் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது.
போராடி வரும் பொதுஜன பெரமுன வலுவடைந்து வருவதை நாடு முழுவதிலுமிருந்து கேம்பல் பிட்டியவில் கூடிய மக்கள் நிரூபித்து வருகின்றனர்.
பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் எம்மையும் எனது அணியினரையும் திருடர்கள் என அவதூறு செய்து நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், மக்களின் அபிலாஷைகளுக்காக நான் அந்த சவால்களை எல்லாம் முறியடித்தேன்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |